Sunday, September 11, 2011


எந்த தளத்தையும் சுலபமாக ஹாக் செய்ய...!!!



                                            
நாம் அனைவருக்குமே மற்றவர்களிடம் நம் திறமையை காட்டவேண்டும் என்ற ஆசை இருக்கும், நாம் ஒரு இணையதளத்தை ஹாக் செய்து அதை மற்றவரிடம் காண்பித்தால் எப்படி இருக்கும்?அதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.


உண்மையில் இது ஹாக்கிங் அல்ல ஒரு சிறிய ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி நாம் மற்றவரை வியப்பில் ஆழ்த்தப் போகிறோம், உதாரணத்திற்கு நான் பேஸ்புக்கை எடுத்துக் கொள்கிறேன்.
1) நீங்கள் பேஸ்புக் நுழைவுப் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.

2)உங்கள் உலவியின்()அட்ரஸ் பாரில் உள்ளதை அழித்துவிட்டு பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட் கோடினை அங்கு பேஸ்ட் செய்து எண்டர் கொடுங்கள்.

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

3)இப்பொழுது அந்த வலைத்தளமானது உங்கள் உலவிக்குள் எடிட் செய்யும் மோடிற்கு மாற்றம் அடையும், நீங்கள் தளத்தை விருப்பம் போல் எடிட் செய்யலாம், மற்றவர்களை ஏமாற்றலாம்.

’desingmode’ என்பது உங்கள் உலவியில் எடிட் மோடுக்கு கொண்டுவருகிறது.
’void 0’ என்பது உங்கள் உலவி எந்த எரரையும் காட்டமால் இருக்க உதவுகிறது.

டிஸ்கி: இது உண்மையான ஹாக்கிங் என்று நம்பி வந்தவர்களுக்காக நிர்வாகம் பொறுப்பல்ல, சூடான தலைப்பு வைத்தால் நிறைய ஹிட்ஸ் வரும் என்ற மூத்த பதிவர்களின் ஆலோசனைப்படி இத்தலைப்பு சூட்டப்பட்டது.மற்றபடி எனக்கும் ஹாக்கிங் பத்தி ஒன்னுமே தெரியாது,உண்மையான ஹாக்கிங் பத்தி நீங்க எங்கயாச்சும் போஸ்ட் பாத்தா எனக்கும் லிங்க் கொடுங்க, நானும் படிச்சு தெரிஞ்சுகிட்டு போஸ்ட் எழுதுறேன்.

-இப்படிக்கு
  நிர்வாகம்.

No comments:

Post a Comment